Home Local news பன்குளம் வாய்க்காலில் வீழ்ந்து கிடந்த யானை உயிரிழப்பு

பன்குளம் வாய்க்காலில் வீழ்ந்து கிடந்த யானை உயிரிழப்பு

திருகோணமலை பன்குளம் பகுதியில் வாய்க்காலில் வீழ்ந்து கிடந்த யானை இன்று (20) மாலை உயிரிழந்துள்ளது.

கடந்த 07ஆம் திகதி முதல், பன்குளம் பிள்ளையார் கோயிலுக்கு அருகில் உள்ள தனியார் காணியொன்றின் வாய்க்காலில் வீழ்ந்த யானையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

யானை உயிரிழந்தமை தொடர்பில் நாளைய தினம் (21) மரண பரிசோதனை உள்ளிட்ட விசேட வைத்திய பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

திருகோணமலை பன்குளம் பகுதியில் வாய்க்காலில் வீழ்ந்து கிடந்த யானை இன்று (20) மாலை உயிரிழந்துள்ளது.

ஆனாலும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் யானையை காப்பாற்றுவதற்காக சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காத நிலையில் யானை உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleசிறுப்பிட்டியில் பெற்றோல் குண்டு வீசி வீடொன்றின் மீது தாக்குதல்
Next articleதங்காலை கான்ஸ்டபிளின் மரணம் தொடர்பில் நால்வர் கைது