Home திருகோணமலை செய்திகள் திருகோணமலை – நிலாவெளி பிரதேசத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

திருகோணமலை – நிலாவெளி பிரதேசத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

இலங்கை விமானப் படையின் செஸ்னா 150 ரக விமானம் ஒன்று திருகோணமலை  நிலாவெளி  இறக்கண்டி பிரதேசத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

தொழிநுட்ப கோளாறு காரணமாக இந்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதனால் அதில் பயணித்த இரு விமானிகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என விமானப்படை பேச்சாளர், க்ரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

திருகோணமலை - நிலாவெளி பிரதேசத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

விமானிகளுக்கான அடிப்படை பயிற்சிக்காக இந்த வகை விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இன்று காலை 10.22 மணிக்கு திருகோணமலை  நிலாவெளி  இறக்கண்டி பிரதேசத்தில் விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட இவ்விமானம் 10.48 மணியளவில் தரையிறக்கப்பட்டது.

விமானிகளின் சாதுர்யத்தினால் பாரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு விமானப்படை கமாண்டர், எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரண அறிவுறுத்தியுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleசடலத்தை தோண்டி நகை தேட முற்பட்ட இருவர் கைது
Next articleவீடு ஒன்றிலிருந்து இளம் தம்பதியின் சடலங்கள் மீட்பு