ராஜபக்ஷ குடும்பத்தினர் திருகோணமலை கடற்படை தளத்திற்குள் பதுங்கியிருப்பதாக பரவிய தகவலையடுத்து, திருகோணமலை கடற்படை தளத்தின் எதிரில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து அங்கு சென்று தஞ்சமடைந்துள்ளதாக கூறப்படும் இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினரை வெளியேற்றவும் அல்லது கைது செய்யவும் எனக்கூறி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, கட்டுநாயக்க விமானநிலையத்தின் ஊடாக அரசியல்வாதிகள் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக, விமான நிலையத்துக்கு நுழையும் வீதிகளில் இளைஞர்கள் காத்திருக்கின்றனர்.
இவர்களுள் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரியும் பெருந்திரளான இளைஞர்களும் இணைந்துள்ளனர்.
இவ்வாறு காத்திருக்கும் இளைஞர்களால் அவ்வீதியூடாக பயணிக்கும் வாகனங்கள் கடுமையாகப் பரிசோதிக்கப்படுகின்றன.