Home திருகோணமலை செய்திகள் திருகோணமலை எரிபொருள் நிலையத்தில் முறுகல் நிலை!! எரிபொருள் தாங்கியை மறித்து போராட்டம்

திருகோணமலை எரிபொருள் நிலையத்தில் முறுகல் நிலை!! எரிபொருள் தாங்கியை மறித்து போராட்டம்

திருகோணமலை மாவட்டம், கந்தளாய் பிரதேசத்தில் வீதியால் சென்ற எரிபொருள் தாங்கியை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருகோணணலை கண்டி பிரதான வீதி கந்தளாய் 91 ஆம் கட்டைப்பகுதியின் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த வேளையில், எரிபொருள் இல்லையென்று திடீரென கூறியதையடுத்தே மக்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் எரிபொருள் தாங்கி உரிமையாளருக்கும், பொதுமக்களுக்கும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினரும், இராணுவத்தினரும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் அங்கு எரிபொருள் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

திருகோணமலை எரிபொருள் நிலையத்தில் முறுகல் நிலை!! எரிபொருள் தாங்கியை மறித்து போராட்டம் திருகோணமலை எரிபொருள் நிலையத்தில் முறுகல் நிலை!! எரிபொருள் தாங்கியை மறித்து போராட்டம் திருகோணமலை எரிபொருள் நிலையத்தில் முறுகல் நிலை!! எரிபொருள் தாங்கியை மறித்து போராட்டம்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  கடலில் குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
READ MORE >>>  இலங்கையில் வாழ முடியாமல் மேலும் 4 பேர் தமிழகம் சென்றனர்!
Previous article2 நாட்கள் வீட்டுக்கு போகாத இளைஞன்: எரிபொருள் வரிசையிலேயே பிறந்தநாள் கொண்டாட்டம்!
Next articleகாலில் முள் குத்தி இளைஞன் உயிரிழப்பு: யாழில் சம்பவம்