திருகோணமலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நேற்றிரவு இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சுமார் 24 வயது மதிக்கத்தக்க இளைஞரொருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
2018ஆம் ஆண்டு முகநூலில் பதிவு செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவரின் புகைப்படம் ஒன்று நினைவூட்டலாக வந்ததை மீண்டும் பகிர்ந்தமை தொடர்பாகவும், சில நாட்களுக்கு முன்பு இன்னுமொரு புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்ட சந்தேகத்தின் அடிப்படையிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனது படிப்பை முடித்துவிட்டு தொழில் வாய்ப்புக்காக காத்திருந்த இளைஞரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞர் கிண்ணியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது