திருகோணமலை – ஹொரவ்பொத்தானை பிரதான வீதியின் ரொட்டவெவ சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தானது இன்று காலை இடம்பெற்றுள்ளது.
ஹொரவ்பொத்தானையிலிருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த மோட்டார்சைக்கிள் எத்தாபெந்திவெவ பகுதியிலிருந்து குறுக்கே வந்த வானொன்றுடன் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்விபத்தில் மொரவெவ – மஹதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த இராணுவ வீரரான அசேல லீலாரத்ன (23 வயது) படுகாயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தொடர்புடைய சாரதியை கைது செய்துள்ளதாகவும், படுகாயமடைந்த இராணுவ வீரர் மகாதேவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.