Home Jaffna News திடீர் சுகயீனமடைந்த பெண் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் உட்பட நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் 5 பேருக்கு கொரோனா...

திடீர் சுகயீனமடைந்த பெண் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் உட்பட நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று!

யாழ்.நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலும் 4 பொலிஸாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

நேற்றுமுன்தினம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்றுமுதினம் இரவு பெண் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் நேற்றய தினம் 34 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டது.

இதன்போது மேலும் 4 பொலிஸாருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் பொறுப்பதிகாரி உட்பட 6 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஜே. வி.பியின் தீப்பந்த போராட்டம் கல்முனையில் முன்னெடுப்பு
Next articleமுகபுத்தகத்தில் விமர்ச்சித்த நண்பர்களை சிலுவையில் அறைந்த இருவர் சிக்கினர்