எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிங்குராங்கொட, பெத்தேகம, திகன, காலி, மாதம்பே, கம்பளை, கண்டி, கேகாலை மற்றும் மத்துகம ஆகிய பிரதேசங்களில் போராட்டம்
தற்போது திகன நகரில் அராஜக அரசாங்கத்திற்க்கு எதிராக பாரிய ஆரப்பாட்டம் ஒன்று பிரதேச மக்களால் முன்னெடுத்து வருகின்றமையால் போக்குவரத்து முற்றாக தடைசெய்யப்படுள்ளது.
திகன நகரில் வியாபார ஸ்தலங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் கண்டி வீதி மஹியங்கனைவீதி மடவலை வீதி இனைக்கும் இடத்திலேயே ஆரப்பாட்டக்காரர்கள் கோசமிடுகின்றமையால் போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது.
வீதிகளிற்கு குறுக்காக வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதோடு புகையிரத வழித்தடங்களும் தடுக்கப்பட்டுள்ளதாக எமது jaffna7 செய்தியாளர் தெரிவித்துள்ளார்.