38 கிலோ 360 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த தாயும் மகனும் எம்பிலிப்பிட்டிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட அதிக நிறையுடைய போதைப் பொருள் இதுவனெ தெரிவித்துள்ள பொலிஸார், பை மற்றும் ஆடைகள் தைக்கும் வியாபாரத்தில் ஈடுபடும் 46 வயதுடைய தாயும் 22 வயதுடைய மகனுமே கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
குறித்த பெண், ஆடைகள் மற்றும் பைகள் தைப்பதற்கான பொருள்களை கொண்டு வரும் போர்வையில், போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் எம்பிலிப்பிட்டிய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கு விநியோகிக்கப்படவிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் இதனுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரையும் ஏனையவர்களையும் கைதுசெய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.