தாயின் திடீர் மரணத்தை மறைத்து மகள்களை பரீட்சைக்கு அனுப்பிய தந்தை -நெகிழ வைக்கும் சம்பவம்

தாய் இறந்ததை மறைத்து தனது மகள்களை தந்தை, பரீட்சைக்கு எழுத அனுப்பி வைத்த நெகிழ்ச்சி சம்பவம் அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது.

தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தென்காசியின் சங்கரன் கோவிலை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி முத்துமாரி ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் முத்துமாரி ஆடுமேய்க்க சென்றபோது, கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அதனைத் தொடர்ந்து, தனது மகள்கள் வானீஸ்வரி மற்றும் கலாராணி ஆகியோரிடம் தாய் முத்துமாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பெரியசாமி கூறியுள்ளார்.

தாயின் திடீர் மரணத்தை மறைத்து மகள்களை பரீட்சைக்கு அனுப்பிய தந்தை -நெகிழ வைக்கும் சம்பவம்

தங்கள் தாய் குணமடைந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் வானீஸ்வரி – கலாராணி இருவரும் 10ஆம் வகுப்பு பரீட்சை எழுத சென்றனர். ஆனால் அவர்கள் பரீட்சை முடிந்து வீடு திரும்பியபோது, தாய் இறந்தது தெரிய வந்துள்ளது.

இதனால் மாணவிகள் கதறி அழுதனர். அதன் பின்னர் பரீட்சை எழுதவேண்டும் என்பதற்காக தங்கள் தந்தை அவ்வாறு கூறி அனுப்பி வைத்ததை மாணவிகள் அறிந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் இருந்தவர்களை கலங்க வைத்தது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..