கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பண்டாரியாவெளி பிரதேசத்தில் மாணவன் ஒருவர் தான் கட்டிய பரனில் இருந்து தூக்கிட்டவாறு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நேற்று (26) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை வீதி பண்டாரியாவெளி கொக்கட்டிச்ச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த (12) வயதுடைய நாகேந்திரன் சதுர்ஸன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
அண்மையில் நடந்து முடிந்த புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற குறித்த மாணவன் தனது சுயவிருப்பில் வீட்ற்கு பின்னால் உள்ள வேம்பு மரத்தின் மேல் இருப்பிடம் அமைத்து அதன் மேல் ஏறி இருப்பது இவரின் வழக்கமான பொழுது போக்காக இருந்ததாகவும் வழமை போல் இன்று பாடசாலை விளையாட்டு பயிற்சியை முடித்து விட்டு வீடு திரும்பிதாகவும் பின்னர் தனது தாயாருக்கான வீட்டு வேலைகளை செய்து கொடுத்து விட்டு தாயார் கொடுத்த சிற்றுண்டியை கையில் எடுத்துக்கொண்டு குறித்த இடத்திற்கு ஏறிச்சென்று இருந்ததாகவும். இதனை மாணவனின் தாயார் பல தடை விரும்பாமல் அறிவுறுத்தல்களை வழங்கியதாகவும் பின்னர் நேரமாகியும் தனது மகனை காணவில்லை என்று தாயார் வீட்டிற்கு பின்னால் சென்று பார்த்தவேளை மாணவன் அவர் இருந்த மரத்தின் கிளையில் கயிற்றில் தூக்கிட்டு காணப்பட்டதாக பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரியின் ஆரம்பக்கட்;ட விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.
மட்டக்களப்பு நீதிமன்ற பதில் நீதவான் அவர்களின் உத்தரவுக்கு அமைவாக சம்பவ இடத்துக்குச் சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணம் விசாரணை அதிகாரி தம்பி பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்ட பின்னர் உடற்கூட்டு பரிசோதனைக்கு பரிந்துரைத்தார். மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.