Home Local news தாதியர்கள் சங்கத்தின் 05 கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி தீர்வு

தாதியர்கள் சங்கத்தின் 05 கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி தீர்வு

அரச சேவைக்கான ஐக்கிய செவிலியர் சங்கத்தின் 7 கோரிக்கைகளில் 05 கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

ஏனைய இரண்டு கோரிக்கைகளையும் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தின் போது நிறைவேற்றவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அரச சேவைக்கான ஐக்கிய செவிலியர் சங்கத்துடன் இன்று (02) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது ஜனாதிபதியால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி,

01. செவிலியர் பல்கலைக்கழகத்தை நிறுவுதல்.

02. நல்லாட்சியின் காலத்தில் 07.12.2017 மற்றும் 32/2017 ஊடாக நிறுத்தப்பட்ட ஊழியர்களின் நிலையை மீண்டும் பெற்றுக் கொடுத்தல்.

03. இடைநிறுத்தப்பட்டுள்ள தரம் III இல் இருந்து தரம் II க்கான பதவி உயர்வை ஐந்து வருடங்களுக்கும், தரம் II இல் இருந்து தரம் I க்கு ஏழு ஆண்டுகள் பதவி உயர்வு வழங்கல்.

04. 20 ஆயிரம் ரூபாய் வருடாந்த சீருடை கொடுப்பனவை பெற்றுக் கொடுத்தல்.

05. தற்போது 36 மணித்தியாலங்களாக காணப்படும் வேலை நேரத்தை வாரத்திற்கு 05 நாட்களாக ( 30 மணித்தியாலங்கள்) கருதி, விசேட குழுவிற்கு ஆய்வுக்கு அனுப்புதல்.

குறித்த 5 விடயங்களை உடனடியாக நிறைவேற்ற ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleதொழிலதிபரிற்கு 300,000 ரூபாவிற்கு விற்கப்பட்ட 15 வயது சிறுமி
Next articleமலையகத்தில் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டபின்னர் அரங்கேறும் கூத்துக்கள்!