தளபதி 66 படத்தில் இரண்டு கதாநாயகிகளா வெளியான அப்டேட் இதோ !!

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தளபதி 66.இப்படத்தை வம்சி இயக்குகின்றார் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் மூலம் விஜய் நேரடி தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறார்.

எனினும் கடந்தாண்டு இப்படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில் ஏப்ரல் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது

மேலும் தளபதி 66 என்று அழைக்கப்பட்டு வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரபு, ஷ்யாம் ஆகிய பல நடிக்கின்றனர். இப்படம் விஜய் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக இருக்குமென்றும், அனைத்து விதமான ரசிகர்களுக்கும் இப்படம் பிடிக்கும் என்றும் இப்படத்தை சார்ந்தவர்கள் கூறிவருகின்றனர்.

சமீபத்தில் இப்படத்தின் இசையமைப்பாளரான தமன் மற்றும் நடிகர் சரத்குமாரும் இக்கருத்தை தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் தளபதி 66 படத்தைப்பற்றிய அறிவிப்பை அடிக்கடி வெளியிட்டு விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர் படக்குழுவினர்.

இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகுமென்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் இருப்பதாக தகவல் வந்துள்ளது.

கதைப்படி படத்தில் இரண்டு நாயகிகள் இருப்பதாகவும் அதில் ராஷ்மிகா ஒரு நாயகியாக நடிப்பதாகவும் பேசப்பட்டு வருகின்றது. அத்தோடு ராஷ்மிகாவை அடுத்து மற்றுமொரு நாயகியை படக்குழு விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளதாகவும் தெரிகின்றது. எனவே தற்போது இந்த தகவல் விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..