அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்து தமிழில் என்ட்ரி கொடுத்தவர் தயாரிப்பாளர் போனி கபூர்.
இப்படத்தை தொடர்ந்து சமீபத்தில் வெளிவந்த வலிமை படத்தை தயாரித்திருந்தார். மேலும், இந்த வாரம் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகவுள்ள நெஞ்சுக்கு நீதி படத்தையும் போனி கபூர் தயாரித்துள்ளார்.
இதுமட்டுமின்றி அஜித்தின் AK 61 மற்றும் ஆர்.ஜே. பாலாஜியின் வீட்ல விஷேஷம் படங்களையும் தயாரித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது தமிழில் முக்கிய தயாரிப்பாளராக இருக்கும் போனி கபூரிடம், எப்போது விஜய்யுடன் இணைந்து படம் பண்ண போகிறீர்கள் என்று சமீபத்திய பேட்டியில் கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த போனி கபூர் ‘ விஜய்யுடன் படம் பண்ணுவதை நாம் முடிவு செய்யமுடியாது. கதை தான் முடிவுசெய்யவேண்டும். நல்ல கதை அமைந்தால் கண்டிப்பாக விஜய்யுடன் படம் பண்ணுவேன் ‘ என்று கூறியுள்ளார்.