தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பிறகு நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். ஏப்ரல் 13 ஆம் தேதிக்கு காத்திருந்த ரசிகர்களுக்கு இன்று அதிகாலையில் இருந்து கொண்டாடி வந்தனர்.
தற்போது உலகளவில் பீஸ்ட் படம் 800க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. படத்தை பார்த்து கலவையான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்.
விஜய் ரசிகர்களே மோசமான கருத்துக்களை கூறி வரும் நிலையில் மதுரையில் பிரபல தியேட்டரான மதுரை பலனி ஆறுமுகம் சினிமாஸ் முதல் காட்சிக்கு கொடுத்த டிக்கெட் விலையை குறைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
முதல் காட்சிக்கு ரூ. 700 க்கு விற்பனை செய்யப்பட்டதாம். தற்போது அந்த தொகை சாதாரண விலைக்கு விற்கும் அளவிற்கு பீஸ்ட் படத்தின் விமர்சனத்தால் இந்த முடிவினை எடுத்துள்ளார்களாம் தியேட்டர் நிர்வாகம்.
#Beast Madurai Palani Arumuga Cinemas have Reduced the Ticket price for your convenience.
Book your Tickets @bookmyshow #BeastMovie #BeastFDFS #Vijay #ThalapathyVijay𓃵 #Thalapathy
— Madurai Cinemas (@MADURAI_CINEMAS) April 13, 2022