Home ஈழம் தலைவன் வழியில் வந்தவர்கள் தடம்மாறி போவதில்லை

தலைவன் வழியில் வந்தவர்கள் தடம்மாறி போவதில்லை

நேற்று கொழும்பில் இருந்து தனியார் பேருந்தில் திருகோணமலைக்கு வந்து கொண்டிருந்தேன்.

டிக்கெட் பரிசோதகர் சோதனை செய்து கொண்டு வந்த போது ஒரு பெண்மணி தனியாக வந்து அவரிடம் சிக்கினார்.

மாட்டிக் கொண்ட அந்தப் பெண் ஒரே அழுகை. ஒன்லைன் புக்கிங் செய்த அவருக்கு சீட் வெயிட்டிங் லிஸ்ட்டில் தான் இருந்தது. கன்ஃபர்ம் ஆகவில்லை.

அவரது கணவர் பேருந்தில் ஏற்றி விட்டு “வெயிட்டிங் லிஸ்டை கன்டக்டரிடம் காட்டு அவர் ஏதாவது டிக்கெட் அட்ஜஸ்ட் பண்ணி தருவார்” என்று கூறி பணம் கூட எதுவும் தராமல் சென்று விட்டாராம்.

இன்று வெள்ளிக்கிழமை ஆதலால் பேருந்து முழுதும் நிரம்பி வழிய பரிசோதகர் அந்தப் பெண்ணிடம் ரூ 2000 அபராதம் தந்தால் தான் போகலாம் இல்லை என்றால் அடுத்த ஸ்டேஷனில் ஒப்படைத்து விடுவேன் என்று கூறிவிட்டார்.

அந்த பெண்ணின் கையில் 300 ரூபா தான் வைத்திருக்கிறார். அவர் கணவனுக்கு போன் செய்து ஏதாவது செய்யுங்கள் என்று கூறுகிறார்.

அவள் கணவர் டிக்கெட் பரிசோதகரிடம் பேசியும் பலன் இல்லை. ஸ்குவாட் யாராவது வந்தால் நானும் மாட்டிக் கொள்வேன் என்கிறார் பரிசோதகர் .

அந்தப் பெண்மணி மிகவும் பயந்து போய் அழுது கொண்டே இருக்கிறார்.

இதைப் பார்த்த அருகில் இருந்த ஒருவர் 2000 ரூபாயை எடுத்து அந்த பெண்ணிடம் கொடுத்து இதைக் கட்டி விட்டு ஊர் போய் சேருங்கள் அழ வேண்டாம் என்கிறார்.

அந்த பெண் அவருக்கு கால் பிடிக்காத குறையாக நன்றி சொல்லி விட்டு டிக்கெட் பரிசோதகரை நோக்கி ஓடுகிறார். அபராதம் செலுத்த .

எனக்கு மிகவும் ஆச்சர்யமாகி விட்டது. நான் 2000 ரூபாய் கொடுக்கலாம் என நினைத்து கொண்டிருக்கும் போதே அவர் எடுத்துத் தந்து விட்டார்!

நான் அவரிடம் சென்று அவர் கை பிடித்து பாராட்டினேன். விசாரித்த போது அவர் ஒரு முன்னாள் போராளி என்றும் ஒரு அலுவலாக கொழும்பு வந்ததாகவும் கூறினார்.

அவருக்கு ஒரு சல்யூட் அடித்து விட்டு ஒரு செல்பி எடுக்கலாமா எனக்கேட்டேன். ஆனால் அவர் மறுத்து விட்டார். மீண்டும் ஒரு முறை அவரைப் பாராட்டினேன். அதற்குள் அவரது சக நண்பர்கள் அவரை சூழ்ந்து கொள்ள நான் எனது இடத்திற்கு வந்து விட்டேன்.

சற்று நேரம் கழித்து வந்த அந்த பெண் அவரிடம் அந்த 2000 ரூபாயை திருப்பிக் கொடுத்தார்.

அவர் ஏன் அபராதம் கட்டவில்லையா என்று விசாரிக்க அந்தப் பெண் , இல்லை டிக்கெட் பரிசோதகர் “போன ஸ்டொப் வரை தான் ஸ்குவாட் வர சான்ஸ் – இனி வர வாய்பில்லை. எனவே அபராதம் வேண்டாம்” என சொல்லி விட்டதாகக் கூறினார்.

எங்கும் ஏமாற்றுபவர்கள் நிறைந்த இந்த காலத்தில் 2000 ரூபாய் யோசிக்காமல் எடுத்துத் தந்த அந்த முன்னாள் போராளி ஒரு புறம், அந்த பெண்மணியின் பரிதாப நிலை கண்டு அபராதம் தவிர்த்த டிக்கெட் பரிசோதகர் ஒருபுறம் , அபராதம் வேண்டாம் என்றவுடன் அந்த பணத்தைத் தானே வைத்துக் கொள்ளாமல் திரும்ப தந்த அந்த பெண் ஒருபுறம்…

மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்று என்னை நெகிழ வைத்த தருணங்கள் …

இது ஒரு உண்மை சம்பவம் ஆனால் ஊர், பெயர் மாற்றப்பட்டுள்ளது.
முகநூல் பதிவு

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleசிம்பு நடித்து வரும் பத்து தல படத்தின் லேட்டஸ்ட் மரண மாஸ் அப்டேட் இதோ !!
Next articleபஸ்ஸில் யன்னலால் எட்டி பார்த்த குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்