Home Local news தற்கொலைக் குண்டுதாரிகளின் தந்தையும் சகோதரரும் பிணையில் விடுதலை!

தற்கொலைக் குண்டுதாரிகளின் தந்தையும் சகோதரரும் பிணையில் விடுதலை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு தற்கொலைக் குண்டுதாரிகளின் தந்தையான கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் இப்ராஹிம் உள்ளிட்ட இருவரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்கொலைக் குண்டுதாரிகளின்

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிணையில் விடுவிக்கப்பட்ட மற்றைய பிரதிவாதி மொஹமட் ஹிஜாஸ் என தெரிவிக்கப்படுகிறது

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இப்ராஹிம் ஹாஜியாரின் இரண்டு மகன்கள் தற்கொலை தாக்குதல் நடத்தினர்.

தெமட்டகொடையிலுள்ள அவர்களது வீட்டிற்கு பொலிசார் சென்ற போது, தற்கொலை தாக்குதல் நடத்திய ஒரு மகனின் மனைவி தனது பிள்ளைகளுடன் குண்டை வெடிக்க வைத்து தற்கொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது..

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபுத்தளத்தில் பெண் ஒருவர் வெட்டிக்கொலை
Next articleமட்டக்களப்பில் சைக்கிளில் தமது கடமையில் ஈடுபடும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்.