தம்மிக்க பண்டாரவின் தயாரிப்புக்கு மருத்துவ பானமாக அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளபோதும், கொரோனா எதிர்ப்பு மருந்தாக அங்கிகாரம் வழங்கப்படவில்லை என, ஆயுர்வேத ஆணையாளர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
எனினும், அந்த பாணிக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக உரிமை, உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளது என ஆயுர்வேத ஆணையாளர் சற்றுமுன்னர் அறிவித்தார்.
கொரோனா வைரஸ் அலையின் போது, ஒரு வகையான பாணியை தயாரித்திருந்த தம்மிக்க பண்டார, அப்பாணியை பருகினால், கொரோனா தொற்றுவதை தடுக்குமென பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார்.
கேகாலையைச் சேர்ந்த நாட்டு மருத்துவரான தம்மிக்க பண்டார, தனது கனவில் வந்த காளியம்மனே, இந்த பாணி மருந்தை தயாரிக்குமாறு கூறியதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தம்மிக்க பண்டார தயாரித்த இந்தப் பாணத்தை, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன ஆகியோரும், ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் பருகியிருந்தனர்.
இந்த நிலையில், தம்மிக்க பண்டாரவின் தயாரிப்புக்கு மருத்துவ பானமாக அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளபோதும், கொரோனா எதிர்ப்பு மருந்தாக அங்கிகாரம் வழங்கப்படவில்லை என, ஆயுர்வேத ஆணையாளர் தெரிவித்திருந்தமை தெரிந்ததே!