Home Tamil News தமிழர் பகுதிகளில் தொடரும் கொடூரங்கள்!

தமிழர் பகுதிகளில் தொடரும் கொடூரங்கள்!

கிளிநொச்சி, பரந்தன் சிவபுரம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலமானது இன்று காலை பரந்தன் சிவபுரம் பகுதியில் பாழடைந்த தற்காலிக கொட்டகையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் எமது செய்தி பிரிவு வினவிய போது, குறித்த ஆணின் சடலமானது இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் அப்பகுதி பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

Gallery Gallery

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமூன்று சிறுமிகள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
Next article‘ஜெய்பீம்’ திரைப்பட சர்ச்சை – நடிகர் சூர்யா வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!