Home Local news தமது தந்தையையும் விடுதலை செய்யுங்கள் என ஆனந்த சுதாகரின் மகன் , மகள் நாமல் ராஜபக்‌ஷவிடம்...

தமது தந்தையையும் விடுதலை செய்யுங்கள் என ஆனந்த சுதாகரின் மகன் , மகள் நாமல் ராஜபக்‌ஷவிடம் கோரிக்கை !

அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் இருவரும், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவை, இன்று (27) சந்தித்தனர்.

வடமராட்சியின் முள்ளி பகுதியில் இடம்பெற்ற சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை திறப்பு விழாவிற்கு வந்த போதே நாமல் ராஜபக்‌ஷவை ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது தமது தந்தையை விடுதலை செய்யுமாறு, ஆனந்த சுதாகரின் மகன் கவிரதன், மகள் சங்கீதா ஆகியோர் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

அதேவேளை, அரசியல் கைதிகளின் உறவுகளும் அண்மையில் விடுதலையான அரசியல் கைதிகளும் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleநிரபராதி என விடுதலையான யாழ் வாசியின் உயிரிழப்பில் சந்தேகம்?
Next articleதனிமைப்படுத்தல் விதிமுறைகளில் புதிய மாற்றம்