Home Indian news தப்பியோடிய மணமகனை நடு வீதியில் விரட்டிப்பிடித்த மணமகள்!

தப்பியோடிய மணமகனை நடு வீதியில் விரட்டிப்பிடித்த மணமகள்!

தொலைக்காட்சி நாடகம், சினிமாவிற்கு மிஞ்சிய திருப்பங்கள், காட்சிகளுடன் பல திருமணங்கள் நடந்து வருகிறது. அப்படியான சம்பவமொன்றே இது.

தப்பியோடிய மணமகனை விரட்டிப் பிடித்து, நடு வீதியிலேயே என்னை திருமணம் செய்து கொள் என மணப்பெண் அடம்பிடிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

பீகாரின் நவாடாவில் இந்த சம்பவம் பதிவானது. அதை ஒருவர் காணொளியாக பதிவு செய்து, சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

நவாடாவில் உள்ள பகத் சிங் சௌக்கில், சந்தைக்கு திங்கள்கிழமை குடும்பத்துடன் சென்று கொண்டிருந்த யுவதி, திடீரென மணமகனை பார்த்துள்ளார். யுவதி விரட்டிச் சென்ற போது மாப்பிள்ளை தப்பியோடிய போது, எனைய குடும்ப உறுப்பினர்களால் அவர் விரட்டிப் பிடிக்கப்பட்டார்

மாப்பிள்ளை தப்பிக்க மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் வெள்ளியளிக்கவில்லை.

மாப்பிள்ளையை ஒரே பிடியாக பிடித்த பெண், “மேரி ஷாதி கர்வாவோ” (என்னை உடனே திருமணம் செய்து கொள்) என்று கெஞ்சினார்.

அங்கு பெருமளவு மக்கள் கூடிவிட்டனர். பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை சுமுகமாக்கினார்.

இந்த இளைஞனுடன் யுவதின் திருமணம் மூன்று மாதங்களுக்கு முன்பு நிச்சயிக்கப்பட்டது. பல்சர் பைக் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் வரதட்சணையும் வழங்கப்படுகிறது. திருமண நேரம் நெருங்கும் போது, ​​அந்த இளைஞன் இப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று திகதியை தள்ளிப்போட்டு வந்துள்ளார். அன்றிலிருந்து அந்த இளைஞன் பல மாதங்களாக திருமணத்தை தள்ளிப்போட்டு வகிறார்..

இதையடுத்து போலீசார் தலையிட்டு, மகிளா காவல் நிலையத்தை ஒட்டியுள்ள கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous article60 வயதுக்கு மேற்பட்ட சகலரையும் டிசம்பருக்குள் ஓய்வு..
Next articleஇன்றைய ராசிபலன் – 31/08/2022, தனுசு ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..