சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். அதன்பிறகு மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி விட்டார்.
அவர் சினிமாவில் நடித்து ரசிகர்களை கவர்ந்தாரோ இல்லையோ ஆனால், தனது இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து விட்டார். அந்த அளவுக்கு ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிபடுத்தி வருகிறார்.
இவர் நடிப்பில் கடைசியாக தனுஷின் ‘மாறன்’ திரைப்படம் வெளியானது. இதில் ஹீரோயினாக நடித்திருந்தார் மாளவிகா மோகனன். ஒரு காட்சியில் தனுஷுடன் ரொமான்ஸ் செய்வது போல காட்சி இருக்கும். ஆனால், அந்த காட்சி ட்ரைலரில் மட்டுமே வந்தது. திரைப்படத்தில் அது இல்லை.
அண்மையில் மாளவிகா மோகனன் ரசிகர்களுடன் டிவிட்டரில் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், மாறன் ரொமான்ஸ் காட்சியை பதிவிட்டு நீங்கள் படுக்கை அறை காட்சியில் எத்தனை முறை ஷூட் செய்தீர்கள்’ என்று ஆங்கிலத்தில் வெளிப்படையாக கேட்டுவிட்டார்.
அதற்கு செம கூலாக பதிலளித்துள்ளார் மாளவிகா மோகனன். அவர் உங்கள் மண்டைக்குள் இவ்வளவு இருட்டாக இருக்கிறதா என்று அந்த ரசிகருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது பதிலை கொடுத்துவிட்டார்.
How many times the Maran bed scene been filmed ? #AskMalavika https://t.co/NkaGmMdGJC pic.twitter.com/2xtvJHAGCT
— 𝙅 𝙊 𝙕 𝙒 𝘼 ツ (@Jozwa_twitz) May 18, 2022