Home மட்டக்களப்பு செய்திகள் தனியார் பஸ்வண்டியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம்

தனியார் பஸ்வண்டியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம்

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி ஆரையம்பதி பாலமுனை சந்தியில் தனியார் பஸ்வண்டியும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் (17) மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்

மட்டக்களப்பில் இருந்து களுவாஞ்சிக்குடியை நோக்கி பிரயாணித்த தனியார் பஸ்வண்டியும் களுவாஞ்சிக்குடியில் இருந்து மட்டக்களப்பை நோக்கி பிரயாணித்த முச்சக்கரவண்டியும் ஆரையம்பதி பாலமுனை சந்தி வீதி வளைவில் சம்பவதினமான இன்று பகல் 12.30 மணியளவில் நேருக்கு நோர் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டி சாரதி உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

இதனையடுத்து படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மட்டு போதனாவைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

தனியார் பஸ்வண்டியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம் தனியார் பஸ்வண்டியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம் தனியார் பஸ்வண்டியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம் தனியார் பஸ்வண்டியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம் தனியார் பஸ்வண்டியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleWhich Company Would You Choose?
Next article15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் !! திருகோணமலையில் இளைஞரொருவர் கைது