Home கிண்ணியா செய்திகள் தனிமையில் இருந்த பெண்ணை சுத்தியலால் மூர்க்கத்தனமாக தாக்கி நகைகள் கொள்ளை!

தனிமையில் இருந்த பெண்ணை சுத்தியலால் மூர்க்கத்தனமாக தாக்கி நகைகள் கொள்ளை!

கிண்ணியா- பைசல் நகர் பகுதியில் வசித்து வந்த அப்துல் லத்தீப் பாத்தும்மா (79வயது) என்ற பெண் தனிமையாக இருந்தபோது இருவர் தனது வீட்டுக்கு வந்து சுத்தியலால் தலையில் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை கழுத்தில் இருந்த தோடு, தங்க ஆபரணங்களை கழற்றி சென்றதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து குறித்த பெண் படுகாயம் அடைந்த நிலையில் கிண்ணியா தள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து

மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

கிண்ணியா பிரதேசத்தில் தற்போது போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருகின்றமையால் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சிசிரிவி காணொளிகளையும் பெற்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபலாலியில் சிறுமியின் சங்கிலி அறுத்த பின் கடத்த முயற்சியா?: படைத்தரப்பை சேர்ந்தவர் சிக்கிய கதை!
Next articleஅரச பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து!