Home வவுனியா செய்திகள் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பஸ்தர் கிணற்றிலிருந்து சடலமாக கண்டெடுப்பு

தனிமைப்படுத்தப்பட்ட குடும்பஸ்தர் கிணற்றிலிருந்து சடலமாக கண்டெடுப்பு

வவுனியா கற்குழி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட ஒருவர் இன்று புதன்கிழமை கிணற்றிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் உட்பட்ட அவரின் குடும்பத்தினர் அண்மையில் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் நேற்று மாலை வீட்டிலிருந்த அவரை காணாமல் அவரது உறவினர்கள் தேடியுள்ளனர்.

இதன்போது கிணற்றில் சடலமாக கிடந்தமை கண்டறியப்பட்டது. கற்குழி பகுதியை சேர்ந்த கணேசன் இளங்குமரன் என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா கற்குழி பகுதியில் தனிமை வவுனியா கற்குழி பகுதியில் தனிமை

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleவாகனம் திருத்தும் போது மது என நினைத்து பெட்ரி அமிலத்தை அருந்தியவர் மரணம்!
Next articleதனியார் வாகன பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுங்கள்!! எரிபொருள் விலை குறையாது!