Home Local news தனது அதிகாரங்களை பிரதமர் ரணிலுக்கு வழங்கி ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வெளியான வர்த்தமானி

தனது அதிகாரங்களை பிரதமர் ரணிலுக்கு வழங்கி ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வெளியான வர்த்தமானி

ஜனாதிபதியின் அதிகாரங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கும் வகையில் அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இன்று முதல் அமுலாகும் வகையில் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி ஜனாதிபதியின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு உத்தியோகப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தான் இலங்கைக்கு வெளியே இருப்பதன் காரணமாக பதவிக்குரிய தத்துவங்கள் பணிகளை கடமைகள் புரிவதற்கு இயலாதென கருதுவதனால் தான் இலங்கைக்கு வெளியே இருக்கும் காலப்பகுதியில் அவற்றை பிரயோகிப்பதற்கான புரிவதற்கான அதிகாரங்களை பிரதமருக்கு வழங்குவதாக ஜனாதிபதி விசேட வர்த்தமானியில் தெரிவித்துள்ளார்.

தனது அதிகாரங்களை பிரதமர் ரணிலுக்கு வழங்கி ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வெளியான வர்த்தமானி

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  விற்பனைக்காக கடத்தப்பட்ட மொனராகலை சிறுமி மீட்பு
READ MORE >>>  முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் தூசி தட்டப்படும் புலிப் பூச்சாண்டியும்
Previous articleகொழும்பு பிரதமர் செயலக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர் உயிரிழப்பு
Next article50 மணி நேர தலைமறைவு வாழ்க்கை முடிவுக்கு ! கடந்த நாட்களில் அரங்கேறிய நாடகங்கள் !