தடுப்பூசி செலுத்திக்கொள்ளாவிட்டால், கையடக்க தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்படும் என பாகிஸ்தான் அரசாங்கம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் அலுவலகத்துக்கு வரத்தடை, வேதனம் வழங்கப்படமாட்டாது போன்ற அறிவித்தல்களும் விடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த உத்தரவுகளை அடுத்து பொதுமக்கள் தடுப்பூசி பெறுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதாக பாகிஸ்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுமக்கள், தடுப்பூசி முகாம்களில் மணிக்கணக்கில் காத்து நின்று தடுப்பூசிகளை செலுத்திக்கொள்கின்றனர்..
பாகிஸ்தானில் இதுவரையில் 10 லட்சத்து 58 ஆயிரத்து 405 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
9 லட்சத்து 54 ஆயிரத்து 711 பேர் மீண்டுள்ளனர். 23 ஆயிரத்து 702 பேர் மரணமாகியுள்ளனர்.