Home Local news தடுப்பூசியை பெற 1906 எனும் இலக்கத்திக்கு அழையுங்கள்;

தடுப்பூசியை பெற 1906 எனும் இலக்கத்திக்கு அழையுங்கள்;

மேல் மாகாணத்தில் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியை வழங்கும் விசேட திட்டமொன்று செவ்வாய்கிழமை (10) முதல் அமுல்படுத்தப்படும் என அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றொழிப்புக்காக முதலாவது டோஸை பெற்றுக்கொள்ளாத, மேல் மாகாணத்திலிருக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், கடுமையான நோய்வாய்பட்டிருப்பவர்களுக்கு மட்டுமே இந்த விசேட செயற்றிட்டம்  முன்னெடுக்கப்படவுள்ளது.

தடுப்பூசியை பெற 1906 எனும் இலக்கத்திக்கு அழையுங்கள்;

அதற்காக, 1906 என்ற இலக்கத்தை அழைத்து, முன்கூட்டியே பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தவிர்த்துகொள்வதற்கான நல்லதொரு தீர்வு, தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதாகும் என்றும் அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்கவின் கையொப்பத்துடன் அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleவவுனியாவில் வயல் பகுதியில் இருந்து மனித மண்டை ஓடு மீட்கப்பட்டது!
Next articleயாழ்.பண்ணைப் பாலத்திலிருந்து தவறி வீழ்ந்தவரைக் காணவில்லை