Home Jaffna News டெங்கு காய்ச்சலினால் மாணவன் உயிரிழப்பு – யாழ்.மாநகரில் சம்பவம்

டெங்கு காய்ச்சலினால் மாணவன் உயிரிழப்பு – யாழ்.மாநகரில் சம்பவம்

டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கொழும்புத்துறை பாண்டியன்தாழ்வு பகுதியைச் சேர்ந்த கருணாகரன் ஆரோன் (வயது-11) என்ற யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவனே உயிரிழந்தார்.

கடந்த 18ஆம்ம் திகதி காய்ச்சல் காரணமாக அவர் பனடோல் உட்கொண்டுவிட்டு இருந்துள்ளார்.

எனினும் 19ஆம் திகதி மீண்டும் வயிற்றோட்டம் வாந்தி ஏற்பட்டு மாணவன் பாதிக்கப்பட்டுள்ளார்.

டெங்கு காய்ச்சலினால் மாணவன் உயிரிழப்பு – யாழ்.மாநகரில் சம்பவம்

அதனால் அவர் நேற்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

டெங்கு காய்ச்சல் காரணமாகவே அவர் உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.

இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேமகுமார் இன்று மேற்கொண்டார்.

more news… visit here
READ MORE >>>  சிறுமியை சீரழித்தவருக்கு சிறை! தம்பலகாமத்தில் சம்பவம்.
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  காணாமல் போன சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
READ MORE >>>  யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்.தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் மரணம்
Previous articleவிடுதலை படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இதோ !!
Next article‘தளபதி 66’ விஜய் படத்தில் பிரபுதேவா !!வெளியான அப்டேட் இதோ