எங்கள் அண்ணா படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி பிரபலமான நடிகையாக உள்ள நமீதாவுக்கு ( Namitha ) மார்க்கெட் இல்லாத நிலையில் தனது நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.இது குறித்து அவர் கூறுகையில், சிறந்த நண்பரான சஷிதர் பாபுவால் நாங்களும் இருவரும் ஒருவரையொருவர் அறிமுகம் செய்துகொண்டோம். சிறிது சிறிதாக நாங்கள் நண்பர்கள் ஆனோம். கடந்த செப்டம்பர் 6 அன்று கடற்கரையில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இரவு உணவு ஏற்பாடு செய்த வீரா, காதல் உணர்வுமிக்க கேள்வி ஒன்றை என்னிடம் கேட்டார்.
நான் மிகவும் ஆச்சர்யப்பட்டுப் போனேன். நான் அதை எதிர்பார்க்கவில்லை. நான் உடனே சம்மதம் சொன்னதற்குக் காரணம், இருவருக்கும் ஒரே லட்சியம், ஒரே ஆன்மிக உணர்வு இருந்ததுதான். பயணம், விலங்குகள் மீதான அன்பு என இருவருக்கும் ஒரே ஆர்வங்கள். இருவரும் வாழ்க்கை மீது அதீத பிரியம் கொண்டவர்கள்.
என்னை முக்கிய நபராக எண்ணும் ஒருவருடன் இணையவுள்ளேன். நான் ஆசீர்வதிக்கப்பட்டவள். கடந்த 3 மாதங்களில் நான் அவரை எந்தளவுக்குப் புரிந்துகொள்கிறேனோ அந்தளவுக்கு அதிர்ஷ்டம் கொண்டவளாக எண்ணிக்கொள்கிறேன்.
அவர் வெளிப்படுத்தும் அக்கறை, ஆதரவினால் ஆண்கள் மீது மீண்டும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இத்தருணத்தில் அனைவருடைய அன்பும் ஆசீர்வாதமும் எங்களுக்குத் தேவை என்று கூறியுள்ளார். இவர் திருமணம் செய்து முடித்ததும் எங்கு சென்றார் என்ன ஆனார் என்பதே தெரியவில்லை.
ஆனால் தற்பொழுது பெங்களூரில் தனது கணவருடன் குடும்ப வாழ்க்கையை நடத்தி வருகிறார் இவர் சமூக வலைதளத்தில் அடிகடி சுறுசுறுப்போடு இருக்கும் இவர் இப்பொழுதெல்லாம் ஆடிக்கொருமுறை அம்மாவசைக்கு ஒருமுறைதான் வருகிறார்.இ ந்த நிலையில் இவர் திருமணதிற்கு பிறகு கணிசமாக உடல் எடையை ஏற்றியுள்ளார் நமீதா இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.