Home Accident News டீசல் பெற்றுக் கொள்ள வந்த உழவு இயந்திரம் வாய்க்காலில் புரண்டு விபத்து

டீசல் பெற்றுக் கொள்ள வந்த உழவு இயந்திரம் வாய்க்காலில் புரண்டு விபத்து

கிளிநொச்சியில் டீசல் பெற்றுக்கொள்ள வந்த உழவு இயந்திரம் வாய்க்காலில் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

கிளிநொச்சி – கரடிபோக்கு சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கு அதிகளவான உழவு இயந்திரங்கள் வருகை தந்திருந்தன.

இந்நிலையில், குறித்த உழவு இயந்திரம் கட்டுப்பாட்டிலிருந்து விலகி அருகில் உள்ள நீர்ப்பாசன வாய்க்காலில் விழுந்துள்ளது.

அதனை மீட்பதற்கு விவசாயிகள் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

டீசல் டீசல்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி விபத்து: மாணவரொருவர் பலி
Next articleசட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது: உழவு இயந்திரங்களும் மீட்பு