திருகோணமலை-ஹொரவ் பொத்தானை பிரதான வீதி வேப்பங்குளம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இரண்டு லொறியும் சேதமடைந்துள்ளன.
இவ்விபத்து நேற்றிரவு (26) இடம்பெற்றுள்ளது
திருகோணமலையில் இருந்து மணல் ஏற்றிச்சென்ற லொறியின் சாரதி வேப்பங்குளம் பகுதியில் டிப்பர் வாகனத்தை நிறுத்திவிட்டு வெற்றிலை கூறு சாப்பிட்டுக் கொண்டிருந்த வேளை பின்னால் வேகமாக வந்த சீமெந்து ஏற்றி வந்த லொறி மோதியதாகவும் இதனால் இரண்டு லொறியும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
குறித்த விபத்தில் சீமெந்து ஏற்றிவந்த லொறியின் சாரதிக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.