ஜெட் வேகத்தில் செல்லும் சிவகார்த்திகேயன் !!விஜய் ,அஜித்தை முந்துவாரா சிவகார்த்திகேயன் கசிந்த உண்மை !!

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்கள் நடிப்பில் வெளியான சமீபத்திய படங்கள் அனைத்தும் படுதோல்வி அடைந்து மண்ணை கவ்வி வருகிறது. ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்தே படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அஜித் நடிப்பில் வெளியான வலிமை, விஜய் நடிப்பில் பீஸ்ட போன்ற படங்கள் படுதோல்வி அடைந்துள்ளது. இப்படி முன்னனி நடிகர்கள் நடிக்கும் படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து அழிவின் விழிம்பில் உள்ளது தமிழ் சினிமா என்று சொல்லும் சூழல் அமைத்துள்ளது.

முன்னனி நடிகர்கள் வரிசையில் இருந்த விக்ரம் உட்பட பல நடிகர்கள் காணாமல் போய் விட்டனர், இரண்டாம் கட்ட நடிகர்களான சூர்யா, சிம்பு, தனுஷ் ஆகியோரும் சொல்லும்படி இல்லை. இந்நிலையில் சிறிய பட்ஜெட் படங்கள் தான் ஓரளவு தமிழ் சினிமாவில் லாபத்தை பெற்று தருகிறது. இந்நிலையில் தமிழ் சினிமா நடிகர்கள் பேன் இந்தியா ஸ்டாராக உருவெடுத்தால் மட்டுமே தங்களை சினிமாவில் காப்பாற்றி கொள்ள முடியும் என்கிற நிலை தற்பொழுது உருவாகியுள்ளது.

மேலும் தமிழக மக்களுக்குக்கு குண்ட சட்டியில் குதிரை ஓட்டும் தமிழ் சினிமா மீது சலிப்பு வந்துவிட்டது என்பதை, சமீபத்தில் பேன் இந்தியா திரைப்படங்கள் தமிழகத்தில் வெற்றி பெற்று வருவதும், அதே சமயத்தில் தமிழ் சினிமா பெரும்பாலும் மண்ணை கவ்வி வருவதையும் நிரூபித்து வருகிறது, அந்த வகையில் பேன் இந்தியா படங்களில் தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்கள் நடிக்க விரும்பினாலும் அதற்க்கான வாய்ப்புங்கள் இல்லை என்றே கூறப்படுகிறது.

பேன் இந்தியா படத்தில் டூப் போட முடியாது அதனால் இனி வயதான ரஜினியை வைத்து படம் இயக்க வாய்ப்பில்லை, நடிகர்கள் அஜித், விஜய் ஆகியோர் குறைந்த கால் சீட் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள், அதனால் அவர்கள் கொடுக்கும் கால் சீட்டில் படத்தை எடுத்து முடிக்க முடியாது. அஜித், விஜய் போன்ற நடிகர்கள் சம்பளத்தை குறைத்து அதிக நாட்கள் கால் சீட் தரமாட்டார்கள்,அதனால் இவர்களும் பேன் இந்தியா படத்தில் நடிக்க வாய்ப்பில்லை.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த RRR படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பங்கேற்றது, மேலும் KGF படத்தின் வெற்றிக்கு அந்த படத்தின் ஹீரோ யாஷ்க்கு வாழ்த்து தெரிவித்ததும், பதிலுக்கு அவர் இவருக்கு நன்றி தெரிவித்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்திற்கு வாழ்த்து தெரிவித்துளார். சிவகார்த்திகேயன் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் பேன் இந்தியா ஸ்டார் ஆகவேண்டும் என்கிற காய் நகர்த்தல் தான் என்று கூறப்படுகிறது.

பாகுபலி, RRR போன்று இரண்டு ஹீரோ நடிக்கும் படத்தில் ஒரு ஹீரோவாக பேன் இந்தியா படத்தில் நடித்து பேன் இந்தியா ஸ்டார் ஆகி விட வேண்டும் என ஆங்காங்கே பிறமொழி இயக்குனர்களிடம் சிவகார்த்திகேயன் துண்டை போட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தால், கர்நாடக சினிமாவில் உள்ள முன்னனி நடிகர்களை யாஷ் பின்னுக்கு தள்ளியது போன்று, இங்கே அஜித், விஜய் போன்ற நடிகர்களை பின்னுக்கு தள்ளி பேன் இந்தியா ஸ்டாராக ஜொலிப்பார் சிவகார்த்திகேயன் என கூறப்படுகிறது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..