Home Local news ஜனாதிபதி மாளிகையில் கிடைத்த 17.5 மில்லியன் ரூபாய்!! அமைச்சர் ஒருவரிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு அழுத்தம்

ஜனாதிபதி மாளிகையில் கிடைத்த 17.5 மில்லியன் ரூபாய்!! அமைச்சர் ஒருவரிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு அழுத்தம்

கோட்டை ஜனாதிபதி மாளிகையில் காணப்பட்ட பதினேழரை மில்லியன் ரூபாய் பணத்தை அமைச்சர் ஒருவரிடம் ஒப்படைக்குமாறு பொலிஸ் உயர் அதிகாரியொருவர் விடுத்த கோரிக்கையை கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிராகரித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களினால் ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்தபோதே இந்தப் பணத் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் ஜனாதிபதி மாளிகையில் கடமையாற்றிய சிறப்பு அதிரடிப்படையின் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் நிஷேதா பெர்னாண்டோவிடம் பணத்தை வழங்க போராட்டக்காரர்கள் தீர்மானித்தனர்.

ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களிடம், பணத்தை ஏற்றுக்கொள்வது சட்டப்படி செல்லாது என, கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு, பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் 17.5 மில்லியன் ரூபாய் பணத்தை கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் கையளித்துள்ளனர்.

அந்தத் தொகையை நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்குத் தேவையான ஆவணங்களை அந்தத் தருணத்தில் நிலைய பொறுப்பதிகாதியான தலைமைப் பொலிஸ் பரிசோதகர் சாகர லியனகே தயாரித்துள்ளார்.

பணம் கிடைத்த இடத்திற்கு உடனடியாக பொலிஸ் அதிகாரிகள் குழுவை அனுப்பி அந்த இடத்தை படம் பிடித்து பணத்தை ஒப்படைத்தவர்களின் வாக்குமூலங்களையும் பதிவு செய்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில், அமைச்சரவை அமைச்சர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் காணப்பட்ட பணத்தை ஒப்படைக்குமாறு கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு பொலிஸ் மூத்த அதிகாரி ஒருவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

மீட்கப்பட்ட பணத் தொகையை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளை தாம் செய்துள்ளதால் பணத்தை அபகரிக்க முடியாது என கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பந்தப்பட்ட மூத்த பொலிஸ் அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.

READ MORE >>>  பந்துலவினால் பதறிப்போயுள்ள கொவிட் செயலணி!

குறித்த பணத்தை சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் ஒப்படைக்குமாறு, மூத்த பொலிஸ் அதிகாரி தொடர்ச்சியாக கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தொகை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் அதனை எவருக்கும் வழங்க மாட்டோம் எனவும் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பந்தப்பட்ட மூத்த பொலிஸ் அதிகாரியிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  சடுதியாக அதிகரிக்கப்படும் உணவுப் பொதி, பாணின் விலை
Previous articleதம்மிக்க பெரேரா இராஜினாமா
Next articleதீ வைத்ததாக கைதான மூவருக்கும் விளக்கமறியல்