Home Local news ஜனாதிபதி பதவி விலகவேண்டும் – காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உறுதி – 8 கோரிக்கை

ஜனாதிபதி பதவி விலகவேண்டும் – காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உறுதி – 8 கோரிக்கை

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பதவி விலகவேண்டும் என்பது உட்பட 8 கோரிக்கைகளை காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரதிநிதிகள் புதிய பிரதமரிடம் கையளித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் அனைத்து தரப்பினதும் கோரிக்கைகளை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

8 கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரதிநிதிகள் செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்துள்ளனர்.

புதிய பிரதமர் மக்களின் குரல்களை செவிமடுக்கவேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி பதவி விலகவேண்டும்,18 மாதங்களிற்கான இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவேண்டும் அதில் 15 அமைச்சர்கள் மாத்திரம் இடம்பெற்றிருக்கவேண்டும்,20வது திருத்தத்தை நீக்கிவிட்டு 21 வது திருத்தத்தை நிறைவேற்றவேண்டும், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக நிவாரண வரவுசெலவுதிட்டத்தை சமர்ப்பிக்கவேண்டும்,தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களை கணக்காய்வு செய்யவேண்டும், உட்பட 8 கோரிக்கைகளைஅவர்கள் முன்வைத்துள்ளனர்.

”கோத்தா கோ கம(#Gotagogama) ”
போராட்டம் முன்வைத்துள்ள கோரிக்கைகள் வெளிவந்துள்ளன. இவ்வளவுதான் அவர்களின் கோரிக்கை. தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள். போராட்டங்கள் இதற்காகவே நடைபெற்றன.

1.)ஜனாதிபதி கோத்தபாயா பதவி விலக வேண்டும்

2.) 15 அமைச்சர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஒரு இடைக்கால அரசாங்கம் 18 மாத காலத்திற்கு நீடிக்கவேண்டும்

3) 20வது திருத்தத்தை நீக்குதல் மற்றும் புதிய 21வது திருத்தத்தை கொண்டு வருவது போன்ற அரசியலமைப்பின் அத்தியாவசிய திருத்தங்கள்

4) பொருளாதார நெருக்கடி, நிவாரண வரவு செலவுத் திட்டத்திற்கான கோரிக்கைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய இன மத சமூகங்களுக்கு சமூக பாதுகாப்பு

5)தற்போதைய தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளின் செயற்பாடுகள் குறித்து மீளாய்வு

6)நிதி மற்றும் பிற குற்றங்கள் அனைத்து குறித்தும் வெளிப்படையான கண்காணிப்பு

7)அனைத்து குடிமக்களின் அடிப்படை உரிமைகளான வாழ்வதற்கான உரிமை

8)நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல்கள்

இங்க ஒரு இடத்திலும் நாட்டில் புரையோடிப்போயுள்ள இன முறுகல் இனப்பிரச்சனை குறித்து பேசப்படவில்லை. கடந்தகால குற்றங்களுக்கான பொறுப்புக்கூரல் கோரப்படவில்லை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையினை முற்றாக ஒழிக்க பரிந்துரை இல்லை. மொழிகளுக்கான மதங்களுக்கான சம உரிமை குறித்து கதையில்லை.

Gotagogama demands are as follows:

1)President Gotabaya Rajapaksa must resign

2)An interim government limited to 15 ministers that remains for a period of 18-months

3)Essential amendments to the Constitution, such as repealing the 20th Amendment and bringing in the new 21st Amendment

4)The economic crisis, requests for a relief budget and social security net for vulnerable communities

5)Audit of current elected officials

6)Transparent surveillance of all crimes that have been committed financial and otherwise

7)The Right to life which is the Fundamental Rights of all citizens

8)Fair and Independent Elections

more news… visit here
Dit1skexcaitxev - ஜனாதிபதி பதவி விலகவேண்டும் - காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உறுதி – 8 கோரிக்கை
201025 403b62ca 4e4f 4617 A86d 5243cbca27a1
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
2e33a8de C506 4930 9923 Ee8d624ba53d - Today News

CLICK HERE..
296da23b Ab74 4b65 82ea E06235f25a9a - Today News

CLICK HERE..
Ddcc3af5 De0b 486e 93f8 1d3336f1c42c