ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்ட போராட்டகார்கள் அங்கிருந்து செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர்.
இதன் போது அவர்கள் எதிர்கால வேலைத்திட்டத்தை முன்வைத்தனர்.
கோட்டாபய ராஜபக்ச நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியில் இருந்து விலக வேண்டும். ரணில் விக்ரமசிங்க உட்பட அரசாங்கத்தின் அமைச்சர்கள், செயலாளர்கள், பணிப்பாளர் சபையின் தலைவர்கள், தூதுவர்கள் பதவி விலக வேண்டும்.
மக்களின் பிரதிநிதித்துவத்துடன் கூடிய இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டும். போராட்டகாரர்களின் பிரதிநிதித்துவம் மற்றும் அதிகாரங்களுடன் கூடிய மக்கள் பேரவை நியமிக்கப்பட வேண்டும்.
அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
மக்களுக்கு உடனடியாக பொருளாதார நிவாரணங்களை வழங்க வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள போராட்டகாரர்கள், அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.
மக்களின் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டும். சட்டம் சகலருக்கு சமமானதாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி மாளிகையில் ஊடக சந்திப்பை நடத்திய போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.