Home Cinema சொந்த மருமகனிடமே பேரம் பேசிய லதா ரஜினிகாந்த் … இப்படியும் ஒரு மாமியாரா.. கவலையில் ரஜினி

சொந்த மருமகனிடமே பேரம் பேசிய லதா ரஜினிகாந்த் … இப்படியும் ஒரு மாமியாரா.. கவலையில் ரஜினி

தனுஷ் – ஐஸ்வர்யா இருவருக்கும் இடையில் அடிக்கடி ஏற்பட்டு வந்த சண்டை உச்சகட்டத்தை அடைந்ததை தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி நள்ளிரவு சுமார் 11 மணியளவில் இருவரும் பிரிவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள். ஐஸ்வர்யா – தனுஷ் இருவருக்கும் இடையில் அடிக்கடி பிரச்சனை நடந்து வருவது பின்பு இவர்கள் மீணடும் இணைந்து கொள்வது என்பது. தொடர்ந்து வழக்கமாக இருந்து வந்த ஓன்று தான் என்றாலும், இவர்கள் பிரிவது என்பது யாரும் எதிர்பாராத ஓன்று தன.

ரஜினிகாந்த் மகளை திருமணம் செய்து கொண்ட பின்பு சினிமாவில் தனுஷ் வளச்சிக்கு மாமனார் ரஜினிகாந்த் செல்வாக்கு பெருமளவில் உதவியாக இருந்தது, இதன் காரணமாக தான் ஹிந்தியில் அமிதாப்பச்சன் உடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் நடிகர் தனுஷ். இதனால் எப்போதும் மாமனார் ரஜினிகாந்த் மீது தனுசுக்கு மதிப்பும், மரியாதையும் உண்டு. அதே போன்று மருமகன் தனுஷ் மீது அளவு கடந்த பாசம் ரஜினிகாந்துக்கு உண்டு.

மனைவி ஐஸ்வர்யாவின் நீண்ட நாள் இயக்குனர் ஆசையை நிறைவேற்றும் முயற்சியில் இறங்கிய தனுஷ், தனது மனைவி இயக்கத்தில் படம் எடுக்க எந்த ஒரு தயாரிப்பாளரும் முன் வராததால், சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி 3 படத்தில் மனைவி இயக்கத்தில் நடித்தார் தனுஷ், இந்த படம் மிக பெரிய நஷ்டத்தை கொடுத்தது. தொடர்ந்து பல படங்கள் தயாரித்த தனுஷ் ஒரு சில படங்களை தவிர்த்து மற்ற படங்கள் தோல்வியை தழுவியதை தொடர்ந்து கடனாளியானார் தனுஷ்.

மருமகன் கடனில் இருப்பதை உணர்ந்து உதவ முன்வந்த ரஜினிகாந்த், தனது மருமகன் தயாரிப்பில் ஒரு படம் சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்து மருமகன் தனுஷை கடனில் இருந்து மீட்போம் என தனது மனைவி மகளிடம் தெரிவித்துள்ளார். ஆனால் மனைவி லதாவுக்கு இதில் உடன்பாடு இல்லை. தனுஷ் தயாரிப்பில் ரஜினி சம்பளம் வாங்கி கொண்டு நடிக்கட்டும் அந்த படத்தில் கிடைக்கும் லாபத்தில் தனுஷ் கடனை அடைத்து கொள்ளட்டும் என்பதில் லதா உறுதியாக இருந்துள்ளார்.

READ MORE >>>  ஷி இஸ் ஆன் ஃபயர்' 'தாகட்' கங்கனாவின் புதிய படத்தை பற்றிய வெளியான அப்டேட் இதோ !!

மாமனார் ரஜினிகாந்த் சம்பளம் வாங்காமல் தனது தயாரிப்பில் நடிக்க இருக்கும் தகவல் முதலில் தனுசுக்கு சென்றுள்ளது. அப்பாடா .. கடன் தொல்லை முடிந்தது என மகிழ்ச்சியில் இருந்த தனுஷை நேரில் அழைத்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் குறித்து பேசியுள்ளார் லதா, அப்போது மாமனார் ரஜினிகாந்த் உங்களுக்கு கால்சீட் கொடுத்தது உங்களுக்கு கிடைத்த மிக பெரிய வரம் என்றும், மேலும் இதற்கு முன்பு அவர் நடித்த கபாலி படத்தில் வாங்கிய அதே சம்பளத்தில் நடிப்பார் என்று லதா தெரிவித்துள்ளார்.

இதை கேட்டு ஷாக் ஆனா தனுஷ், சம்பளம் வாங்காமல் ரஜினி நடிப்பதாக வந்த தகவலை தெரிவிக்க. அது எப்படி முடியும் என வேறு யாரோ ஒருவரிடம் பேசுவது போன்று பேசிய லதா. கடைசியாக ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தின் சம்பளம் 80 கோடி. தற்பொழுது உங்கள் தயாரிப்பில் நடிக்க ஒரு 20 கோடி குறைத்து ரூபாய் 60 கோடி சம்பளம் வாங்கி கொண்டு நடிக்கட்டும் என லதா தனது மருமகன் தனுஷிடம் பேரம் பேசியதாக கூறப்படுகிறது.

ஆனால் தனுஷ் தனது மாமியாரிடம் தன்னுடை சூழல் குறித்து எடுத்து கூறிய பின்பு, ஒரு வழியாக மனம் இறங்கி 40 கோடி சம்பளத்தில் ரஜினிகாந்த் நடிப்பார் என லதா தெரிவித்ததை தொடர்ந்து. தனுஷ் தயாரிப்பில் காலா படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து மருமகனிடம் கூட இறங்கமின்றி மாமியார் லதா பேரம் பேசிய விவகாரம் அறிந்த சினிமா துறையினர் இப்படியும் ஒரு மாமியாரா.? என ஆச்சரியத்துடன் வியந்து பார்த்தது குறிப்பிடத்தக்கது.

more news… visit here
READ MORE >>>  விருமன் படத்தின் ரீலிஸ் தேதியை அறிவித்த கார்த்திக்
READ MORE >>>  வசூலில் புதிய சாதனை படைத்த வலிமை !! தமிழ்நாட்டுல மட்டுமே இத்தனை கோடி வசூலா
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் சேல்ஸ் ரிப்போர்ட் இதோ !!
Previous articleபிரதமரின் நாட்டு மக்களுக்கான விசேட உரையில் கூறியது என்ன
Next articleயாழ்.பல்கலை முள்ளிவாய்க்கால் தூபியில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அஞ்சலி