சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள்களான ஐஸ்வர்யா மற்றும் செளந்தர்யா சினிமாவில் இயக்குனர்களாக அவதாரம் எடுத்து பின் திருமணமும் செய்து கொண்டனர். இருவரின் வாழ்க்கையில் முதல் திருமணம் தோல்வியில் முடிந்து விவாகரத்தும் பெற்றனர்.
முதலில் செளந்தர்யா ரஜினிகாந்த் முதல் கணவரை விவாகரத்து செய்து பின் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இந்த பிரச்சனை எல்லாம் முடிந்து படங்களில் கவனம் செலுத்தும் சமயத்தில் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷை 18 வருடம் கழித்து விவாகரத்து செய்தார்.
இதனால் மன வேதனையில் ரஜினிகாந்த் இருந்து வருகிறார். அதேசமயம் ரஜினிகாந்தின் ஆசியுடன் விவாகரத்துக்கு பின் மீண்டும் இயக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபகாலமாக இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருந்து உடற்பயிற்சி, யோகா, சைக்கிளிங் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஐஸ்வர்யா தன் தங்கை செளந்தர்யாவின் கணவரை வைத்து ஒரு படம் இயக்க திட்டமிட்டிருந்தார். இதற்காகதங்கையிடம் பேச வேண்டவே வேண்டாம் என்று செளந்தர்யா கூறியுள்ளார்.
இது பிரச்சனையாக ரஜினிகாந்த் காதில் கூட செளந்தர்யா போட்டுள்ளார். இதனால் கோபத்தில் இரு மகள்களையும் அழைத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடினமாக கண்டித்து பேசியுள்ளாராம்.
அக்கா தங்கை வாழ்க்கையால் பெரியளவில் பாதிக்கப்பட்டது சூப்பர் ஸ்டார் தான். அவரின் மகள்களாக ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.