சொந்த அண்ணனுடன் மோதும் கார்த்தி !! கைதி 2வில் வில்லனாகிறார் சூர்யா !! வைரலாகும் தகவல் இதோ !!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்துத் திரைப்படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெறுவதால் இவருடைய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்புக் காணப்படுகின்றது.

மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019இல் வெளியான திரைப்படம் கைதி. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

கைதி படத்தின் கிளைமாக்சில் இரண்டாம் பாகத்திற்கான ஹின்ட் கொடுக்கப்பட்டு இருக்கும். இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் விக்ரம் படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் வருகின்றார், அதுவும் கைதி படத்தில் வந்த அர்ஜுன் தாஸின் கேங்லீடராக வருகிறார்.

இதன்படி பார்த்தால் கைதி 2 வில்லன் சூர்யா தான் என ரசிகர்கள் ஒரு தியரி கூறி வருகின்றனர். அட இது நல்லாருக்கேப்பா.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..