Home மருத்துவம் சொட்டை விழுந்த இடத்தில் முடி வளரனுமா? இதைச் செய்யுங்கள்.

சொட்டை விழுந்த இடத்தில் முடி வளரனுமா? இதைச் செய்யுங்கள்.

பொதுவான அழகான தோற்றத்துக்கு கூந்தலின் பங்கும் அவசியமானது. இருபாலருக்கும் இது பொருந்தும். வயதான காலத்துக்குப் பிறகு உண்டாகும் வழுக்கை தலை எல்லாம் இப்போது இளவயதிலேயே சந்திக்கிறார்கள்.

எதையும் ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை செய்தாலே முழுவதுமாக சரிசெய்துவிடமுடியும். இதற்கு ஒரு சில வழிகள் உள்ளது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • ஆமணக்கு எண்ணெயை கொஞ்சம் சூடுபடுத்தி, இரவு தூங்குவதற்கு முன் தலைக்கு தேய்த்து விட்டு தூங்கவும். இந்த முறை வாரத்தில் 2 அல்லது 3 முறை செய்து வந்தால் வழுக்கை விழுந்த இடத்தில் புதிதாக முடி முளைத்து வரும். இது முடி வேர் பகுதியை தூண்டி, தலை முடி நன்கு வளர செய்வதுடன் இரத்த ஓட்டத்தை அதிகரித்து தலைமுடி வேர்பகுதியை உறுதிப்படுத்துகிறது.
  • வாரத்தில் இரு முறை இந்த கற்றாழையை தலைக்கு தேய்த்து குளிப்பதினால் பொடுகு மற்றும் வறட்சியின் காரணமாக முடி உதிர்தல் போன்றவை குணமாகும். வழுக்கை விழுந்த இடத்தில் இந்த கற்றாழையை 15 நிமிடம் மசாஜ் செய்தால் தலை முடி வேர்களுக்கு மறுபிறப்பு கொடுக்கும்.
  • இஞ்சியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அவற்றை ஆலிவ் எண்ணெயில் ஊறவைத்து சிறிது நேரம் கழித்து சொட்டை விழுந்த இடத்தில் தடவும். இவ்வாறு இந்த முறையை வாரத்தில் இரு முறை செய்து வந்தால் சொட்டை விழுந்த இடத்தில் முடி வளரும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது.
  •  ரோஸ்மேரியை அரைத்து தலை தேய்த்து குளிப்பதினால் தலைமுடி உதிர்வு பிரச்சனை குணமாகிறது. மேலும் வழுக்கை விழுந்த இடத்தில் புதிதாக முடி வளரும் மற்றும் பொடுகு பிரச்சனைக்கும் தீர்வாகிறது.
  • வெந்தயம் மிகவும் உதவுகிறது என்பதால், வாரத்தில் ஒரு முறை வெந்திய பொடியை 3 ஸ்பூன் எடுத்து கொண்டு பாலில் கலந்து தலை தேய்த்து குளித்தால் சொட்டை விழுந்த இடம் மறைந்து போகும்.
  •  கரிசலாங்கண்ணி முடி உதிர்வை தடுத்து அடர்த்தியான முடியை கொடுக்கும். முடியை மிக மென்மையாக வைக்க இதனை தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து தடவுங்கள்.
  • துளசி இலைகளை வெயிலில் காயவைத்து பிறகு பொடி செய்து ஆலிவ் எண்ணெய்யுடன் சேர்த்து கலக்கவும். இதனை 20 நிமிடம் தலையில் தேய்த்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இவ்வாறு செய்தால் வழுக்கை இருந்த இடத்தில் முடிகள் வளரும்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபால், முட்டை ஆகியவற்றின் விலைகளும் அதிகரிக்கின்றது.
Next articleWhatsApp ல் இவ்வளவு இருப்பது உங்களுக்கு தெரியுமா?