மீரிஹான பாகொட வீதியில், மூன்று மாடி வீட்டிலுள்ள சொகுசு வீடொன்றில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதி யொன்றை முற்றுகையிட்ட நுகேகொட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் 12 பெண்கள் உள்ளிட்ட 14 பேரை கைது செய்துள்ளனர்.
மேற்படி சொகுசு வீட்டில் ஒவ்வொரு மாடிகளிலும் ஒவ்வொரு மசாஜ் நிலையங்கள் நடத்திச் செல்லப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சுகாதார விதிமுறைகள், தனிமைப்படுத்தல் விதிமுறைகள், தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறும் வகையில் குறித்த மசாஜ் நிலையத்துக்கு நபர்கள் வந்துச் சென்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தொலைபேசி மற்றும் இணையத்தளம் மூலமாக 6,000, 20,000 ரூபாய்க்கு பெண்கள் விற்பனைச் செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட காலி, வென்னப்புவ, தம்புள்ளை, சீதுவ, பண்டாரவளை, மெதவாச்சி, பிபிலை, வெயாங்கொட, கேகாலை,
தனமல்வில, எம்பிலிப்பிட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 18 தொடக்கம் 46 வயதுடைய பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல பெண்கள் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு அமுலிலுள்ளக் காலப்பகுதியில் குறித்த நிலையத்துக்கு வந்துள்ளனர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.