Home Cinema செல்வராகவன் தனுஷ் காட்டும் வெறித்தனம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ !

செல்வராகவன் தனுஷ் காட்டும் வெறித்தனம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ !

2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் தனுஷ்.

இவர், இயக்குனர் செல்வராகவன் அவர்களின் தம்பி மற்றும் தயாரிப்பாளர் – இயக்குனர் கஸ்தூரி ராஜா அவர்களின் மகன் ஆவார்.

செல்வராகவன் தனுஷ் காட்டும் வெறித்தனம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ !

காதல் கொண்டேன், திருடா திருடி, சுள்ளான், புதுப்பேட்டை போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென்ற தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

பொல்லாதவன், ஆடுகளம், 3, வேலையில்லா பட்டதாரி, வடசென்னை, கர்ணன் போன்ற படங்கள் மூலம் செம ஹிட் ஆகிவிட்டார்.

Dhanush Selvaragavan

நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்கள் எடுத்துவிட்டார்.

ஒல்லியாக இருக்கும் இவனெல்லாம் ஹீரோவா என கேலி கிண்டல் பேசியவர்கள் தற்போது இவர் ஹாலிவுட், பாலிவுட் வரை சென்றது பார்த்து விடாமுயற்சியால் விஸ்வரூப வெற்றிபெற்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார்.

Dhanush Selvaragavan

துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான செல்வராகவன், அதனைத் தொடர்ந்து, காதல் கொண்டேன், 7G ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, NGK, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் போன்ற வித்தியாசமான திரைக்கதைகளை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர்.

பல இயக்குனர்கள், அடுத்தடுத்து நடிகர் அவதாரத்தை எடுத்து வரும் நிலையில், தற்போது செல்வராகவனும் நடிக்கத் தொடங்கியுள்ளார். பீஸ்ட், சாணி காயிதம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Dhanush Yuvan

இப்படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தற்போது தனுஷ் உடன் நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறார்.

செல்வராகவன் தனுஷ் காட்டும் வெறித்தனம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ !

தற்போது, அண்ணன் – தம்பி, செல்வராகவன் – தனுஷ் நடிப்பில் வெளியான புதுப்பேட்டை மற்றும் சாணி காயிதம் போன்ற படங்களில் சில சீன்களை கம்பேர் செய்து எடிட் பண்ணி வீடியோவாக வெளியிட்டு ரசிகர்கள் அதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமீனாவை விட அந்த விஷயத்துக்கு ரேவதி போதும் கமல் கூறிய உண்மை இதோ !!
Next articleஒன்பது நாள் முடிவில் சிவகார்த்தியேனின் டான் படைத்த வசூல் சாதனை என்ன தெரியுமா ?