Home lifestyle செய்யும் போதே நாக்கில் எச்சை ஊறும் தக்காளி குருமா…ஜஸ்ட் 15 நிமிடத்தில் செஞ்சு முடிச்சிடலாம்!

செய்யும் போதே நாக்கில் எச்சை ஊறும் தக்காளி குருமா…ஜஸ்ட் 15 நிமிடத்தில் செஞ்சு முடிச்சிடலாம்!

இரவு அல்லது காலை உணவுக்கு அதிகபட்சம் இட்லி , தோசை , சப்பாத்தி தான் செய்வோம்.

இந்த வகை உணவுகளுக்கு சைட் டிஷுகள்தான் சுவையே.

செய்யும் போதே நாக்கில் எச்சை ஊறும் தக்காளி குருமா...ஜஸ்ட் 15 நிமிடத்தில் செஞ்சு முடிச்சிடலாம்!

அந்த வகையில் நொடியில் செய்யக்கூடிய தக்காளி குருமா செய்து சாப்பிட்டு பாருங்கள். தேவையான பொருட்கள்
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
கல்பாசி 1
கறிவேப்பிலை – சிறிதளவு
சின்ன வெங்காயம் – 10
உப்பு – தே.அ
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
தக்காளி – 3
கொத்தமல்லி தழை – சிறிதளவு

அரைக்க
தேங்காய் – 3 துண்டு
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 7
உடைத்த கடலை – 1 தேக்கரண்டி
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
இலவங்கப்பட்டை – 1 துண்டு
கிராம்பு – 1

செய்யும் போதே நாக்கில் எச்சை ஊறும் தக்காளி குருமா...ஜஸ்ட் 15 நிமிடத்தில் செஞ்சு முடிச்சிடலாம்!

முதலில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ளவற்றை ஜாரில் சேர்த்து மைய அரைத்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

பின் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கல்பாசி போட்டு வதக்குங்கள்.

செய்யும் போதே நாக்கில் எச்சை ஊறும் தக்காளி குருமா...ஜஸ்ட் 15 நிமிடத்தில் செஞ்சு முடிச்சிடலாம்!

பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக்கொள்ளுங்கள். தக்காளியை அரைத்து அந்த விழுதை சேர்த்து நன்கு வதக்குங்கள். மஞ்சள் தூள் சேர்த்துக்கொள்ளுங்கள்.

செய்யும் போதே நாக்கில் எச்சை ஊறும் தக்காளி குருமா...ஜஸ்ட் 15 நிமிடத்தில் செஞ்சு முடிச்சிடலாம்!

எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கியதும் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள்.

பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் தக்காளி குருமா தயார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி தோல்வியடைய முக்கிய காரணமே இவர் தான் !! ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்
Next article11 Best Bike City Games for Android & iOS