சர்வோதயா தொண்டர் நிறுவன மண்டபத்தில் இடம்பெற்ற இச்செயலமர்வில் 168 பேர் கலந்து கொண்டதாகவும், இதனை கிழக்குமாகாண ஆளுநர் ஆரம்பித்துவைத்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இச்செயலமர்வின் இறுதி நாளின்போது அங்கு சென்ற பொது சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் சிலருக்குக் கொரோனாத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும் இவர்களில் சிலருக்கு தமது வீடுகளுக்குச் சென்ற பின்னர் காய்ச்சல் ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இச்செயலமர்வில் கலந்து கொண்ட சுமார் 70 பேர் தத்தமது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.