இயக்குனர் பாலா படம் என்றால் நடிக்கும் நட்ச்சத்திரங்களை கொடுமை படுத்தியாவது நடிப்பை வரவழைப்பார். நடிகர் சூர்யா பல ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிக்க காமிட்டாக்கியது அனைவரும் அறிந்ததே.
அப்படி இருக்கையில் பாலா சூர்யா படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி உள்ளிட்ட சில கடற்கரை பகுதிகளில் நடைபெற்றது. கடல் சம்மந்தமான கதை என்பதால் சீக்கிரம் படத்தை முடிக்கவும் இத்தனை நாள் தான் கொடுக்க முடியும் என்பதாலும் ஷீட்டிங் விறுவிருப்பாக சென்றது.
இந்நிலையில், சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டதாகவும் சூர்யா படப்பிடிப்பில் இருந்து கோபத்துடன் சென்று விட்டதாகவும் செய்திகள் இணையத்தில் கசிந்தது.
ஆனால் அப்படியான பிரச்சனை எதுவும் நடக்கவே இல்லையாம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்ததால் சூர்யா ஓய்விற்காக சென்னை திரும்பியதாக கூறப்படுகிறது. உடனே இணையத்தில் இப்படியான தகவல் பரவியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஜூன் மாதம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் ஆரம்பிக்கவுள்ளார்கலாம்.