தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய வலிமை திரைப்படம் பல விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. இந்தத் திரைப்படத்தை எச். வினோத் இயக்கியுள்ளதோடு போனி கபூர் இதனைத் தயாரித்திருந்தார்.
இப்படத்தைத் தொடர்ந்து ஹெச் வினோத் உடன் மீண்டும் கூட்டணி சேர்கிறார் நடிகர் அஜித். இந்த படத்திற்காக அவர் நீண்ட வெள்ளை தாடி மற்றும் முடி வைத்திருக்கும் புகைப்படங்கள் தான் கடந்த சில வாரங்களாக வைரலாகி வருகின்றன என்பதும் முக்கியமாகும்.
மேலும் AK61 என்று அழைக்கப்படும் இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப் படத்திற்காக ஜிப்ரான் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் நடிகர் அஜித் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.
இப்படத்திற்காக நடிகர் அஜித் தனது உடல் எடையில் இருந்து 25 கிலோ வரை குறைக்க உள்ளார்.
இதுவரை இந்த படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டர்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் ரசிகர்கள் அஜித்தின் புகைப்படங்களை விதம் விதமாக தங்கள் ரசனைக்கேற்ப உருவாக்கி பகிர்ந்து வருகின்றனர். அப்படி ஒரு ரசிகர் வடிவமைத்த அஜித்தின் புதிய போஸ்டர்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து “fire ma” என பாராட்டியுள்ளார்.