Home Local news சுமந்திரனின் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட இளம் இராணுவச் சிப்பாய் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை

சுமந்திரனின் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட இளம் இராணுவச் சிப்பாய் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை

இளம் இராணுவ வீரர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

வெள்ளவத்தை பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றது.

22 வயதான இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாகவும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் இல்லத்தின் பாதுகாப்பிற்காக பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவ சிப்பாயே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து எமது செய்தி சேவை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை தொடர்புகொண்டு கேட்ட போது,

குறித்த இராணுவ வீரர் தனது பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டவர் எனவும் இருப்பினும் தனக்கு இராணுவ பாதுகாப்பு தேவையில்லை என தான் மறுத்து விட்டதாகவும் தெரிவித்தார்.

இருந்த போதும் குறித்த இராணுவவீரர் உட்பட்ட இராணுவ குழுவினர் தனது வீட்டில் இருந்து சில வீடுகள் தள்ளி வீதிப் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வந்துள்ளார் எனவும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் தற்கொலை செய்து கொண்ட இராணுவவீரருக்கும் தனக்கும் எதுவித தொடர்புகளும் இல்லை எனவும் இராணுவ பாதுகாப்பு தேவையில்லை என முன்னரே மறுத்து விட்டதாகவும் தெரிவித்தார்

சுமந்திரனின் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட இளம் இராணுவச் சிப்பாய் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை சுமந்திரனின் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட இளம் இராணுவச் சிப்பாய் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇன்றைய ராசிபலன் – 04/06/2022, துலாம் ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்
Next articleதந்தைக்கு உதவியாக சென்ற மாணவனுக்கு நேர்ந்த சோகம்