தமிழ் புத்தாண்டு சுபகிருது புது வருடம் ஏப்ரல் 14ஆம் தேதி பிறக்க உள்ளது. தமிழ் புத்தாண்டு சுபகிருது வருடம் பிறக்கப்போகிறது. 60 தமிழ் வருடங்களில் சுபகிருது வருடம் 36வது ஆண்டாகும்.
புத்தாண்டில் நவ கிரகங்களின் சஞ்சாரம் இடப்பெயர்ச்சியால் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும், பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
சுபகிருது என்றாலே நற்செய்கை என்று பொருள். அதிகம் நன்மைகள் நிறைந்த சுப-கிருது தமிழ் புத்தாண்டில் ஆண்டு கோள்களில் சுப கிரகமான குரு பகவான் மீன ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்ய உள்ளார். சனிபகவான் மகரம், கும்ப ராசியிலும் பயணம் செய்வார். ராகு மேஷ ராசியிலும் கேது துலாம் ராசியிலும் பயணம் செய்வார்கள்.
சனிபகவான் சித்திரை மாதம் 16ஆம் தேதி ஏப்ரல் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 7.54 மணிக்கு அதிசாரமாக மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார். ஆனி 28ஆம் தேதி ஜூலை 27ஆம் தேதியன்று செவ்வாய்க்கிழமை வக்ர கதியில் மீண்டும் மகர ராசிக்கு திரும்புகிறார்.
திருக்கணித பஞ்சாங்கப்படி 2023ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி நேர்கதியில் சனிபகவான் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். மாத கோள்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ஏப்ரல் 14ஆம் தேதி சூரியன் மேஷ ராசியில் தனது பயணத்தை தொடங்க, கூடவே, புதன், ராகு இணைந்திருக்கின்றனர்.
சிம்ம ராசியில் சந்திரன், செவ்வாய் சுக்கிரன் கும்ப ராசியிலும் பயணம் செய்கின்றனர். இந்த கிரகங்களின் பயணத்தால் அனைத்து ராசியினரிற்கும் என்ன பலன்கள் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம் வாங்க.