யாழ்ப்பாணம் சுன்னாகம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட அமைதியின்மையையடுத்து பொதுமக்களால் எரிபொருள் பவுசர் ஒன்றுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இன்று (21) மாலை இந்த சம்பவம் நடந்தது.
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறையையடுத்து, அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள்.
இந்தநிலையில், சுன்னாகம் எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்துள்ளனர்.
இதன்போது ஏற்பட்ட முரண்பாடொன்றையடுத்து பெற்றோல் ஏற்றி வந்த பவுசர் ஒன்றின் கண்ணாடிகளை இரண்டு இளைஞர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
27,29 வயதான இரண்டு இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.