Home Jaffna News சுன்னாகத்தில் இளைஞன் மீது வாள் வெட்டு

சுன்னாகத்தில் இளைஞன் மீது வாள் வெட்டு

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

சுன்னாகம் கந்தரோடை பகுதியை சேர்ந்த த.நிரோஷன் (வயது 25) என்பவரே படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் வீதியால் சென்று கொண்டிருந்த போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட குழுவொன்று வழிமறித்து வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.

அதில் படுகாயமடைந்த இளைஞனை வீதியால் சென்றவர்கள் மீட்டு தெல்லிப்பழை வைத்திய சாலையில் அனுமதித்தனர்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇலங்கை பெண்ணை கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுத்த காதலன்: தூக்கி வந்து தாலி கட்ட வைத்த போலீசார்
Next articleயாழில் கஞ்சாவுடன் சிக்கிய 3 பேர்